யூ டியூபில் புகழ்பெற்றவர்கள் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் ஆரம்பத்தில் மெட்ராஸ் சென் ட்ரல் என்ற யூ டியூப் சேனலின் மூலம் புகழ்பெற்றார்கள். அந்தந்த நேரத்தில் நடக்கும் சமூக நிகழ்வுகளை பிரதிபலித்து இவர்கள் செய்யும் காமெடி புகழ்பெற்றது.
சமீபகாலமாக பரிதாபங்கள் என்ற யூ டியூப் சேனலில் இவர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அப்படியாக சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட மழை பரிதாபங்கள் வீடியோ பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
புயல் ஏற்படுவதை வைத்து மீடியாக்கள் செய்யும் அலப்பறைகளை இந்த வீடியோ விளக்குகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட நிவர் புயலுக்கு ஒரிஜினலாக விளக்குகிறேன் என நிருபர்களை வைத்து சில சேனல்கள் கடற்கரை அருகில் நிற்க வைத்து குடையை பறக்க வைத்து எல்லாம் நேரலை செய்தது.
இதை கேலி செய்து வீடியோ வெளியிட்டுள்ள கோபி மற்றும் சுதாகர் வீடியோக்கள் இணையத்தில் அதிரடி காட்டி வருகிறது. எல்லா வித அரசியல் மீம்ஸ்களுக்கும் இந்த வீடியோவையே சமூக வலைதளவாசிகள் தற்போது உபயோகப்படுத்தி வருகின்றனர்.