Connect with us

Corona (Covid-19)

ரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை!! ஊரடங்கு உத்தரவால் உயர்வா??

Gold Rate falls high

கொரொனாவின் தாக்கத்தால் ஒட்டுமொத்த நாடுகளுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து நாடுகளிலுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை அமுல்படுத்தியுள்ளது.

கொரொனா நோய் தொற்றால், உலக பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு வீட்டிலேயே இருந்து வருகின்றனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இந்நிலையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்ட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கொரொனா தாக்கத்தினால், காய்கறிகள் மருந்தகங்கள் என குறிப்பிட்ட கடைகள் மட்டுமே மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு திறக்கப்பட்டுள்ளது, அதுவும் தமிழக அரசின் வரையறுக்கப்பட்ட நடைமுறையை கடைகள் பின்பற்றுகின்றனர். ஆனால் நகைக்கடைகள் அனைத்தும் இந்திய அளவில் மூடப்பட்டிருப்பதால், இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யும் சதவீதம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் ஊரடங்கு பின்பற்றி வருவதால் மக்கள் யாரும் தங்கநகைகள் வாங்காவிட்டாலும் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

இன்றைய தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால், அடுத்த மாதம் மிக பெரிய உச்சத்தை தொடும் என்று கூறப்படுகின்றது. ஆதாவது, அடுத்த மாதம் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தகவல்கள் கசிந்துள்ளன. இது உண்மையானால், ஆய்யோ அம்மா! ஊரடங்கு உத்தரவால் தங்கம் வாங்காதது ஒரு கூத்தமா? என்று தான் மக்களுக்கு புலம்ப தோன்றும்.

பாருங்க:  ஃபேமிலி கொரோனா விழிப்புணர்வு குறும்படம் யார் யாரு நடிக்கிறாங்க தெரியுமா?

Corona (Covid-19)

கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்துக்கு 5000 உதவி- கேரள முதல்வர்

மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் அதிகம் கொரோனா தொற்று பரவியது. மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக குறைந்தபோதிலும் கேரளாவில் மட்டும் ஏதோ கேரளா இந்தியாவை விட்டு தனித்து இருப்பதுபோல் கொரோனா குறையாமலே இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா குறைந்திருக்கிறது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அறிவிப்பில் கூறி இருப்பதாவது, கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பங்களில் இறந்தவர் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டித்தந்த நபராக இருந்தால் அவரது குடும்பத்துக்கு மாதம் 5000 ரூபாய் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வரவேற்பு பெற்றுள்ளது.

பாருங்க:  குணமான இரண்டாவது நோயாளி – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
Continue Reading

Corona (Covid-19)

தடுப்பூசி போடுவதை ஹிந்தி சேனலில் காட்ட சொன்ன நரிக்குறவர்

கொரோனா இரண்டாவது அலைக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்துள்ளது. தடுப்பூசி போடாத இடங்களில் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒவ்வொரு ஏரியாவாக சென்று தடுப்பூசி போட சொல்லி வலியுறுத்தி வருகின்றார்.

இன்று அதிகாலை சென்னை மெரினாவில் நரிக்குறவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போது ஒரு நரிக்குறவர் இவ்வாறு கூறினாராம்.

எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள்,எங்களூரில் ( மகாராஷ்ட்ரா)எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும்”என்றாராம்.

இதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாருங்க:  தனுசில் இருந்து மகரத்திற்கு மாறிய சனீஸ்வரர்
Continue Reading

Corona (Covid-19)

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊசி போட்டுக்கொள்ள போலீசார் வீடு வீடாக சென்று அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 485 வாக்குச்சாவடி மையங்களிலும், 100 நடமாடும் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம் போலீசார் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் தடுப்பூசி குறித்தும் நோயில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். இதுகுறித்து எஸ்பி பாலகிருஷ்ணன் கூறுகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து துறை போலீசாருக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தேன்.

அதனடிப்படையில்  நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் திருப்பத்தூர் பஸ் நிலையம், குடியிருப்பு பகுதி, ஓட்டல், கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரி கடைகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம். நோய் தொற்று இல்லாமல் நமது மாவட்டத்தை உருவாக்க முடியும். எனவே தடுப்பூசி குறித்த பயம் எதுவும் தேவையில்லை. குறிப்பாக இணை நோயுள்ளவர்கள் இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய்த்தொற்று வந்தாலும் அதிலிருந்து நாம் உயிர் போகாத அளவிற்கு காப்பாற்றிவிடலாம். எனவே நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று அனைத்து பொதுமக்கள் மற்றும் வணிக வியாபாரிகள், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர், பஸ் ஓட்டுநர்களிடத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விளக்கி வருகின்றனர்.

பாருங்க:  ”கொரொனா” தமிழ்நாட்டினின் நிலவரம் - சுகாதாரத்துறை செயலாளரின் அப்டேட்

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, மாதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசாரும் கிராமப்புற பகுதி நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்து விளக்கி பொதுமக்களுக்கு போலீசார் மத்தியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Continue Reading

Trending