Latest News
கோகுல்ராஜ் கொலை வழக்கு-குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை அறிவிப்பு
கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள மலையில் கோகுல்ராஜ் என்ற இஞ்சினியரிங் மாணவர் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது தீரன் சின்னமலை அமைப்பை சேர்ந்த நிர்வாகி யுவராஜ் என்பவர் யுவராஜை அழைத்து மிரட்டி கண்டித்தாகவும் கூறப்படுகிறது.
இதனால் யுவராஜ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. பின்பு இந்த வழக்கை விசாரித்த அப்போதைய டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்துகொண்டார்.
இவ்வழக்கில் நீண்டகாலம் தலைமறைவாக இருந்த யுவராஜ் ஒரு வழியாக பிடிபட்ட நிலையில் கோகுல்ராஜ் வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
இன்று யுவராஜ் மற்றும் முக்கிய குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.