cinema news
கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்பு- இயக்குனர் ரஞ்சித் வரவேற்பு
கடந்த 2015ல் நாமக்கல்லில் இளைஞர் கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாக தீரன் சின்னமலை இயக்க நிர்வாகி யுவராஜ் கைது செய்யப்பட்டார்.
பல திருப்பங்களான இந்த வழக்கு மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் 5 வருடங்களாக நடைபெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை பலரும் வரவேற்றுள்ள நிலையில் இயக்குனர் ரஞ்சித்தும் வரவேற்றுள்ளார்.
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகள் யுவராஜூக்கும் &கூட்டாளிகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையை வரவேற்கிறோம்.கடும் நெருக்கடிகளுக்கிடையே தளராமல் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த இந்திய கம்யூ. கட்சியின் மூத்த வழக்கறிஞர் திரு. ப.பா மோகன் அவர்களுக்கும்,
வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் ஆகியோருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.பெரும் இழப்பை சந்தித்த நிலையிலும் நீதி கிடைத்திட உறுதியுடன் போராடிய கோகுல்ராஜின் தாயார் திருமதி சித்ரா அவர்களையும் பாராட்டுகிறோம்.
ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்டத்தினை உடனடியாக இயற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இந்த நேரத்தில் வலியுறுத்துவோம் என ரஞ்சித் கூறியுள்ளார்.