இயக்குனர் ஜி.என் ரங்கராஜன் மறைவு

18

80, 90களில் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனராக இருந்தவர் ஜி.என் ரங்கராஜன். இவர் கமல்ஹாசனை வைத்து அதிகமான படங்களை இயக்கியவர். கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா , எல்லாம் இன்ப மயம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

90களில் இவர் படம் அதிகம் இயக்காமல் இருந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக அவருக்கு உதவுவதற்காக கமல் நடித்து கொடுத்த படம் மகராசன்.

தற்போது 90வயதை நெருங்கிய ஜி.என் ரங்கராஜன் இந்நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது மகன் ஜி.என்.ஆர் குமரவேலன் தமிழில் நினைத்தாலே  இனிக்கும் படங்களை இயக்கியவர்.

பாருங்க:  தியேட்டர்கள் இன்று முதல் திறப்பு- இனிமேல் பழைய படங்கள்தான் கதி
Previous articleகலைஞரின் உதவியாளர் சண்முகநாதனை சந்தித்த உதயநிதி
Next articleகொடைக்கானலில் டிரக்கிங் சென்ற 10 பேர் மீது வழக்குப்பதிவு