ஒரு காலத்தில் அறுவடை நாள், பிக்பாக்கெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜி.எம்குமார். பிறகு வெயில் அவன் இவன் படங்களின் மூலம் நடிகராகவும் தற்போது வரை ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிகை பல்லவியை காதலித்து மணம்புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இவரின் சமீபத்திய டுவிட் இதோ.
கடந்த கால காதல் என் ஆன்மாவை தோண்டி எடுக்கும் ஒரு முள்ளாக மாறியுள்ளது. என்னை விட்டு செல்லும்படி அதை கேட்கிறேன் அது இன்னும் என்னை ஆட் கொள்கிறது. இந்த முள்ளை கைவிட ஒரு நல்ல வழி காதலில் தோற்ற எல்லாரையும் போல் தீவிரமான பக்திமானாக மாறி விடுவது என ஜி.எம் குமார் கூறியுள்ளார்.