cinema news
கவர்ச்சி உடை அணிவது காதலருக்கு பிடிக்கவில்லை- ராக்கி சாவந்த்
பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். ஒரு காலத்தில் டிவி ஷோவில் ஜெயிக்கிறவங்களை இவர் கல்யாணம் செய்து கொள்கிறார் என ஒரு டிவி ஷோவெல்லாம் நடத்தப்பட்ட நிலையில் வெற்றி பெற்றவரை இவர் திருமணம் செய்யாதது எல்லாம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்த ராக்கி சாவந்த் அவரை சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளார்.
இப்போது ஆதில் என்பவரை காதலித்து வருகிறார். ஆதிலுடைய வாழ்க்கையில் நான் வந்திருப்பது எங்கள் இருவருக்கும் சந்தோஷத்தை தருகிறது. ஆதில் குடும்பத்தில் எல்லோருமே எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எதிர்ப்புகள் அதிகம் உள்ளது அதை சமாளிக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். ஆதிலுக்கு கவர்ச்சி உடைகள் அணிவது பிடிக்கவில்லை. கவர்ச்சி இல்லாத ஆடை அணிய சொல்கிறார். அதே போல் நான் சினிமாவில் நடிப்பதற்கு அவர் எந்த தடையும் சொல்லவில்லை என ராக்கி சாவந்த் கூறி இருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா , நிக் ஜோனஸ் போல ஆதில் ராக்கி சாவந்தை விட 6 வயது இளமையானவராவார்.