சாலையில் விதிமீறிய பேருந்து ஓட்டுனர் ; பாடம் எடுத்த இளம்பெண் : வைரல் வீடியோ

174

கேரளாவில் ஒரு வழிச்சாலையில் சாலை விதியை மதிக்காமல் வந்த பேருந்து ஒட்டுனருக்கு பெண் ஒருவர் சரியான பாடம் கற்பித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று ஒருவழிச்சாலையில் தவறான பாதையில் மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாக வந்தது. இதைக்கண்ட எதிர ஸ்கூட்டரில் வந்த இளம்பெண் அப்பேருந்திற்கு வழிவிடாமல் அசராமல் நின்றார்.

அந்த பெண் விலகி சென்று விடுவார் என பேருந்து ஓட்டுனர் காத்திருந்த நிலையில் அப்பெண் சாலை விதிகளை மதித்து செல்லும் படி டிரைவருக்கு அறிவுறுத்தினார். எனவே, வேறுவழியின்றி அப்பேருந்து ஓட்டுனர் பேருந்தை திருப்பி சரியான பாதையில் பேருந்தை ஓட்டு சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அரசு பேருந்து ஓட்டுனருக்கு பாடம் கற்பித்த அப்பெண்ணுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்! முதல்வர் உறுதி!