வாங்கிய கடனுக்கு பதில் ஆபாச வீடியோ அனுப்பிய பெண்

329
Girl sent personal videos to man

கடன் வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்கமால் ஆபாச வீடியோக்களை அனுப்பிய பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமதாதபுரம் மண்டபம் பகுதியில் வசிப்பவர் ப்ரீத்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.

ஆனால், நீண்ட நாட்களாகியும், பழனிவாசகம் பலமுறை கேட்டும்  அந்த பணத்தை ப்ரீத்தி திருப்பிக் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் குளிப்பது, ஆடை மாற்றுவது போன்ற தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பழனிவாசகத்தின் செல்போனுக்கு ப்ரீத்தி அனுப்ப தொடங்கியுள்ளார். இது பழனிவாசகத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தது.

வாங்கிய பணத்தை வேறு வழியில் கழிக்க நினைக்கும் ப்ரீத்தியின் தவறான எண்ணத்தை புரிந்து கொண்ட பழனிவாசகம், இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, இதுபற்றி ப்ரீத்தியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாருங்க:  பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் வெளியேறுபவர் இவரா?