இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்ட விவகாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பகுதியில் வசிக்கும் வாலிபர் 19 வயது இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டிற்கு வரும் படி அப்பெண்ணை அழைத்துள்ளார். காதலன் வீடுதான் என நம்பி அப்பெண்ணும் வந்துள்ளார்.
வீட்டிலிருந்த அந்த வாலிபரின் தாய் அப்பெண்ணை வரவேற்று உபசரித்து இனிப்பு பண்டங்களை கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாமல் அப்பெண் அதை சாப்பிட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
அதன்பின் அப்பெண்ணை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய அவரின் தாயே அதை வீடியோ எடுத்துள்ளார். அதன்பின் அந்த வீடியோவை காட்டி அந்த வாலிபரின் சகோதரி மற்றும் கணவர் இருவரும் அப்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண், தனது தந்தை நிலத்தை விற்று வைத்திருந்த ரூ.4 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், அதுவும் போதாது என மீண்டும் அவர்கள் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் இருந்த பணம் எங்கே என அப்பெண்ணின் தந்தை கேட்க, அப்பெண் கதறி அழுது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதில் அதிர்ந்து போன அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.