Latest News
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை
உலகபுகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. இங்கு பவுர்ணமி தோறும் கிரிவலம் மிக புகழ்பெற்றது. இந்த கிரிவலப்பாதை புனிதமான பாதை தினம் தோறும் சித்தர்கள் மகான்கள் சூட்சும வடிவில் இம்மலையை 24 மணி நேரமும் சுற்றி வருவதாக ஐதீகம் உள்ளது.
இதனால் கிரிவலம் செல்வதற்காக மக்கள் அதிக அளவில் இங்கு திரளுகின்றனர். பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல மக்கள் கூட்டம் அதிக அளவில் வரும் நிலையில் இந்த மாத பவுர்ணமி தினமான 29, 30 தேதிகளில் கூட்டம் சேர்வதற்கும் பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.