Food and Kitchen tips
காரமான பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி
சில நேரம் சாப்பாடு நமக்கு உள்ளேயே போகாது அப்படி இருக்கும் நேரத்தில் நாம் நாடுவது ஊறுகாயைத்தான் அப்படி சுவையான பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி என பார்ப்போம்.
100 கிராம் பச்சை மிளகாயை எடுத்துக்கொண்டு அதை அதை மூன்று பாகமாக வருமாறு கட் செய்துகொள்ளுங்கள் மிகவும் குட்டியாக கட் செய்யக்கூடாது.
1 டேபிள் ஸ்பூன் சீரகம், ஒன்றரை டேபிள் ஸ்பூன் வெந்தயம், 1 டேபிள் ஸ்பூன் சோம்பு , 1 டேபிள் ஸ்பூன் மிளகு, இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு இவற்றை ஒரு பேனில் போட்டுக்கொள்ளவும்.
அடுப்பில் தீயை குறைவாக வைத்து இவற்றை சிறிது நேரம் கலர் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அது ஆறிய பிறகு அதை அப்படியே ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு பவுடராக எடுத்துக்கொள்ளவும்.
இப்போது பேனில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கட் பண்ணி வைத்திருக்கும் மிளகாய் துண்டுகளை அதில் இடவும்.
பின்பு பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்கு மிளகாயோடு சேர்த்து அடுப்பில் குறைந்த அளவு தீ வைத்து 5 நிமிடம் பச்சை மிளகாயை வதக்கவும்.
பச்சை மிளகாய் கலர் லேசாக மாறிய உடன் அதனுடன் ஏற்கனவே அரைத்து மிக்ஸியில் வைத்திருக்கும் பவுடரை கலந்துகொள்ளவும். தேவைக்கு உப்பும் அதனுடன் சேர்த்து பச்சை மிளகாயுடன் அந்த கலவையுடன் நன்கு ஒட்டும்படி கிளறி விடவும். இப்போது லேசான புளிப்புக்காக ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது பச்சை மிளகாய் ரெடி இது மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் இதை ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடலாம்.
