விஜய்க்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

15

பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நடிகர் விஜய்க்கு தனது ஆதரவான கருத்தை வழங்கியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஏற்கனவே விஜய் தரப்பில் இருந்து நுழைவு வரி செலுத்தி விட்ட நிலையில், அதற்க்கு வரி விலக்கு கேட்டு அளிக்கும் படிதான் விஜய் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை சிலர் அவர் வரி காட்டாதது போல் தகவலை பரப்பி வந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதியும், வரி என்பது கட்டாயம் செலுத்தப்பட வேண்டியது. நன்கொடை அல்ல என இந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது மட்டும் இல்லாமல் , முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு சமூக வலைதளங்களில் விஜய் எதிர்ப்பாளர்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில்  நடிகை காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் உண்மையான ஹீரோவாகத்தான் பலரது வாழ்க்கையில் உள்ளார். பிரதமரின் கொரோனா நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி என்று அவர் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். பல மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். பல ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்கிறார். நீதிமன்றத்தில் நடந்தது நீதிமன்றத்தோடு விட்டு விட வேண்டும் அவர் செய்த உதவிகளை நாம் மறக்கக் கூடாது இந்த ஒரு விஷயத்திற்காக அவர் செய்த நல்ல விஷயங்களை மறக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.

பாருங்க:  திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே வரும் சன் டிவியின் புதிய திரைப்படம்

இவ்வாறு தனது கருத்தை காயத்ரி ரகுராம் பதிவு செய்துள்ளார்.

Previous articleசின்னத்தம்பி படப்பிடிப்பில் நம்ம டிஜிபி சைலேந்திரபாபு
Next articleரஜினியின் அரசியல் முடிவை வரவேற்ற கேடி குஞ்சுமோன்