நடிகர் பிரசாந்தை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
விஜய், அஜித் ஆகியோருக்கு சீனியராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தவறியவர் நடிகர் பிரசாந்த். இத்தனைக்கும் மணிரத்னம், பாலு மகேந்திரா, ஷங்கர் என பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தவர் அவர். இடையில் சில படங்களில் அவ்வப்போது தலை காட்டினாலும் ஹீரோவாக அவருக்கு வெற்றி தேவைப்படுகிறது.
இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பாலிவுட்டில் ஹிட் அடித்த ‘அந்ததூன்’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை கௌதம் மேனன் இயக்கினால் சரியாக என நினைக்க தற்போது இந்த புராஜக்ட் டேக் ஆப் ஆகியுள்ளது.
நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.