cinema news
கங்கணாவின் விருதை திரும்ப பெற சீக்கிய அமைப்பு வலியுறுத்தல்
தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கங்கணா ரணாவத். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளரான இவர் சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை பிரதமர் வாபஸ் வாங்கிய காரணத்தால் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்க கூடாது என்ற வகையில் மிக கடுமையாக பேசினார்.
இந்த நிலையில் கங்கணாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மாஞ்சிந்தர் சிங் சிர்ஸா மும்பை காவல்துறையில் கங்கணா மீது புகார் அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார்.