Published
1 year agoon
இசைஞானி இளையராஜாவும் கங்கை அமரனும் சகோதரர்கள்.எல்லோரும் ஒன்றாகவே சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னேறியவர்கள்.
கங்கை அமரன் இளையராஜா பிஸியாக இருந்த காலத்தில் அவர் எழுதிய பல படங்களின் பாடல்கள் கம்போஸிங்கை இளையராஜாவின் இசைக்குறிப்புகளுக்கேற்றவாறு கங்கை அமரன் தான் செய்து கொடுப்பார்.
கங்கை அமரன் பாடல்களும் எழுதுவார். இசையமைக்கவும் செய்வார் நடிப்பார், இயக்குனர் ஆகவும் திகழ்ந்தார்.
கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, வில்லுப்பாட்டுக்காரன் உள்ளிட்ட படங்களுக்கு இசைஞானிதான் இசை.
காலச்சூழலில் இளையராஜாவும், கங்கை அமரனும் அதிகம் சந்தித்துக்கொள்ளாத சூழ்நிலைகளே இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அண்ணன் தம்பிகளான இருவரும் ஒன்றாக சந்தித்து மகிழ்ந்துள்ளனர்.
இன்று நடந்த சந்திப்பு .. இறைஅருளுக்கு நன்றி … உறவுகள் தொடர்கதை …!!! @ilaiyaraaja @vp_offl @Premgiamaren @thisisysr pic.twitter.com/7zy8kv6XVm
— gangaiamaren@me.com (@gangaiamaren) February 16, 2022