இன்று கங்கை அமரன் அவர்களின் பிறந்த நாள். கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், கோவில் காளை, சின்னவர் என எல்லாமே மிக அற்புதமான திரைப்படங்கள் ஆகும்.
இசைஞானி இளையராஜாவின் தம்பியாக அறியப்பட்டாலும் தனக்கென்று தனி பாணியை வகுத்து கொண்டவர் இவர்.
செந்தூரப்பூவே என்ற உலகிலே எங்குமே இல்லாத ஒரு பூவை கற்பனையாக எழுதி அது இருப்பது போன்றே காட்டியவர். ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு கண்ணுக்குள்ளே பேதமில்லே பார்ப்பதிலே ஏன் விரிவு, மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு வெட்டுக்கள் குத்துக்கள் போவதேன்ன போன்ற உயர்ரகமான வரிகளுக்கு சொந்தக்காரர்.
வாழ்வே மாயம், பிள்ளைக்காக, சின்னத்தம்பி பெரிய தம்பி என இசையமைப்பதிலும் முத்திரை பதித்தவர் இவர்.
பூஜைக்கேத்த பூவிது உள்ளிட்ட பல பாடல்களை பாடி பாடுவதிலும் முத்திரை பதித்தவர் இவர்.
இன்று இவரின் பிறந்த நாளையொட்டி இவரது மகன் இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.