Entertainment
பன்முக கலைஞர் கங்கை அமரனின் பிறந்த நாள் இன்று
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் ஆக இருந்தாலும் தனது சொந்த திறமையில் முன்னேறி வந்தவர் கங்கை அமரன். வாழ்வே மாயம், ஜீவா,சின்னத்தம்பி பெரிய தம்பி என பல படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பில் கொடி நாட்டியவர்.
இது மட்டுமல்லாமல் கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், ஊரு விட்டு ஊருவந்து, எங்க ஊரு பாட்டுக்காரன், கோவில் காளை, சின்னவர் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராகவும் புகழ்பெற்றவர்.
எண்ணற்ற தமிழ்பாடல்களை எழுதி பாடலாசிரியராகவும் சினிமாவில் புகழ்பெற்றவர் கங்கை அமரன்.
ஒரிரு படங்களில் சிறு சிறு காட்சிகளில் வந்து சென்றாலும் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் கங்கை அமரன் தான் முதலில் நடிக்க வேண்டியதாம் பின்புதான் பாக்யராஜ் நடித்தாராம் அப்படி நடித்திருந்தால் கதாநாயகராகவும் அறியப்பட்டிருப்பார்.
இவரது மகன்கள் வெங்கட் பிரபு இயக்குனராகவும் மற்றும் பிரேம்ஜி இசையமைப்பாளராகவும் அறியப்படுகிறார்கள்.
இப்படி பல பரிமாணங்களை கொண்ட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பாடலாசிரியர் கங்கை அமரனுக்கு இன்று பிறந்த நாள் நாமும் அவரை வாழ்த்துவோம்.
