Tamil Flash News
பட்டப்பகலில் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் காஞ்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் இளைய மகன் சதீஷ்குமார். இவர் ஒரு டிப்ளமோ பட்டதாரி. இவர் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது பெற்றோரை பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது காரில் 7 பேர் கொண்ட கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அவரை துரத்தியது. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த வழியாக வந்த பேருந்தில் சதீஷ் ஏறிவிட்டார். ஆனால், பேருந்தில் ஏறிய அந்த கும்பல் பேருந்தின் உள்ளேயே அவரை கொடூரமாக வெட்டியது. இதைக்கண்டு பயணிகள் அலறினர். அதன்பின் உயிருக்கு போராடிய சதீஷை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் பேருந்திலேயே இறந்துவிட்டார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்து காரணமாக அவருக்கும் அவரின் பங்காளி குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்தது தெரியவந்தது. மேலும், சதீஷ் மீது இரு கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது.