Entertainment
பிரபல பாடகர் கானா பாலா வார்டு கவுன்சிலர் தேர்தலில் தோல்வி
தமிழ் சினிமாவில் பிரபல பாடகராக விளங்கியவர் கானா பாலா. ஆடிப்போனா ஆவணி உள்ளிட்ட பாடல்களின் மூலம் பிரபலமான கானா பாலா குறுகிய நாட்களுக்குள் தான் இல்லாத படமே இல்லை என்ற அளவில் அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு பாடல் பாடினார்.
வக்கீலான இவர் அதைவிட கானா பாடலின் மூலமே பிரபலமடைந்தார். கடந்த சில வருடங்களாக இவர் படங்களில் பாடுவது குறைந்து விட்டது.
இந்நிலையில் சென்னை திருவிக நகர் பகுதியில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு இவர் தோல்வியுற்றார்.
இந்த பகுதியில் கானா பாலாவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருந்த போதிலும் கடைசி நேரத்தில் இவரை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுவிட்டார்.
ஆனாலும் முன்னணி அதிமுக கட்சியை எல்லாம் பின்னுக்கு தள்ளி இவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
