இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தனது வாழ்க்கையை அனில் கும்ப்ளேவுக்கு சமர்ப்பிப்பேன் எனக் கூறியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அனில் கும்ப்ளேவின் பங்களிப்பு குறித்து பேசியுள்ளார். அதில் ’டிஆர்எஸ் முறை மட்டும் முன்பே இருந்திருந்தால் அனில் கும்ளே 900 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்.அதுபோல் ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்.
கும்ப்ளே அவர் கேப்டனாக இருந்த போது என்னிடமும் சேவாக்கிடமும் எங்களிடம் வந்து பேசினார்.அப்பொழுது என்ன நடந்தாலும் சரி இந்த தொடரில் நீங்கள் இருவரும்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் எனக் கூறினார். இதுபோல யாரும் என்னிடம் சொல்லியதில்லை. என் வாழ்க்கையை ஒருவருக்கு அர்பணிப்பேன் என்றால் அது கும்ப்ளேவிற்கு தான்’ எனக் கூறியுள்ளார்.