Connect with us

வெற்றிகரமாக முடிவடைந்தது காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு!…கொண்டாடி மகிழ்ந்த படக்குழு….

kadhalikka neramillai

Tamil Flash News

வெற்றிகரமாக முடிவடைந்தது காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு!…கொண்டாடி மகிழ்ந்த படக்குழு….

ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி  மிகப்பெரிய வெற்றியை பெற்றது “காதலிக்க நேரமில்லை” படம் 1964ல்.   ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் நடிப்பில் வெளிவந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்து படம் பார்க்க வந்தவர்களை மகிழ்ச்சியோடு வீட்டிற்கு செல்ல வைத்தது.

அப்படி ஒரு பிரபலமான பெயரை பெற்றது “காதலிக்க நேரமில்லை”. டி.எஸ்.பாலையா, காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு போன்றோரும் இதில் நடித்திருந்தனர்.

இதே பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளார் கிருத்திகா உதயநிதி. ‘ஜெயம்’ ரவி, நித்யா மேனன் நடித்துள்ளனர் இதில். இயக்குனர் பணியை செய்துள்ள கிருத்திகா உதயநிதியின் நான்காவது படம். “வணக்கம் சென்னை”, “காளி”, “பேப்பர் ராக்கெட்” படங்களே இவர் இதற்கு முன்னர் இயக்கியிருந்த படங்கள்.

kaadhalikka neramillai

kaadhalikka neramillai

ரெட் ஜெயின்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் யோகி பாபு, வினய் ராய், லால் உள்ளிட்ட பிரபலங்கள் ‘ஜெயம்’ ரவி,  நித்யா மேனனுடன் இணைந்து நடித்துள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சில தொய்வுகளுக்கு பிறகு விரைவாக நடத்தப்பட்ட இந்த படத்தினுடைய முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி  மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் புகைப்படங்களே தற்போது வைரல் ஆகி வலம் வந்து ஆக்கிரமித்துள்ளது வலை தலங்களை. பெயரை மட்டுமே கொண்டு வேறு கதைக்களத்தை கொண்டு வெளியாகுமா? அல்லது அதே போல் நகைச்சுவை ததும்பும் படமாக வெளிவருமா? என தொடர்ந்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

‘ஜெயம்’ரவி நடித்து சமீபத்தில் வெளியான “சைரன்” படம் பாசிட்டிவ் விம்ர்சனத்தை பெற்றிருந்தாலும் பெரிய அளவில் போனியாகவில்லை. இதனால் “காதலிக்க நேரமில்லை” யை அதிகமாகவே நம்பியிருக்கிறார் ‘ஜெயம்’ ரவி

Continue Reading
You may also like...

More in Tamil Flash News

To Top