பாட்டிலில் கிடந்த தவளை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

பாட்டிலில் கிடந்த தவளை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கு பாட்டிலில் தவளை இறந்த நிலையில் கிடந்ததால் அதை வாங்கிய நபர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆகியுள்ளது. இந்நிலையில் யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் ஒருவர் மது வாங்கியுள்ளார்.

இதையடுத்து அந்த பாட்டிலில் இருந்த சரக்கைக் குடிக்க ஆரம்பித்த அவர், பாதிக் குடித்த பின்னர் அந்த பாட்டிலில் தவளை ஒன்று கிடந்துள்ளதைப் பார்த்தார். இதனால் அதிர்ச்சியான அவர், மதுபானக் கடைக்கு தகவலை சொல்லியுள்ளார். அவர்கள் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்பதற்காக அந்த பாட்டிலை வாங்கிக்கொண்டு வேறு புதிய பாட்டிலைக் கொடுத்துள்ளனர். இந்த செய்தி மதுப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.