Latest News
விடுதலை போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தி இடம்பெறாத விவகாரம்- முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி
தமிழக விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற பாரதியார், வீரமங்கை வேலு நாச்சியார், மருதுபாண்டியர், வ உசி போன்றோர் அடங்கிய ஊர்தி ஊர்வலம் குடியரசு தினத்தன்று நடைபெறும்.
இதில் தமிழக விடுதலை வீரர்களின் ஊர்திகளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்த வருடம் மறுத்துள்ளது.
இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
கடிதத்தில் பதிலளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தமிழக வீரர்களின் ஊர்தி இடம்பெறாதது நிபுணர் குழுவின் இறுதி முடிவு இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
இதனால் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவில் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களின் ஊர்தி ஊர்வலம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அன்றைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததன் அடையாளமான தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் #RepublicDay-வில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்!
தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை மறைக்கும் எந்த முயற்சியும் ஒருபோதும் பலிக்காது! pic.twitter.com/qMp3tPD60u
— M.K.Stalin (@mkstalin) January 18, 2022
