ரசிகர்களுக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டதாம்! கோலியின் டிவிட்டால் விளைந்த குழப்பம்!

137

இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஒரு டிவிட்டால் லத்தின் அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் குழப்பத்துக்கு ஆளான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் செல்ல நாயின் பெயர் ப்ரூனோ என்று பெயர். இந்த சமீபத்தில் உயிரிழந்துவிட்டது. இதனால் சோகமான கோலி, ப்ருனோவுடன் தான் இருந்த படங்களை ட்விட்டரில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். கோலியின் வருத்தத்தில் பங்கு கொள்ள நினைத்த அவரது ரசிகர்கள் இணையத்தில் RIP Bruno என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இந்த ஹேஷ்டேகை கண்ட லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நெட்டிசன்கள் தங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஏன்ன்றால் பிரபலமான லத்தீன் அமெரிக்க பாடகர் பெயர் ப்ரூனோ மார்ஸ். அவரது பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இந்த ஹேஷ்டேகை பார்த்ததும் பாடகர் ப்ரூனோ மார்ஸ்தான் இறந்துவிட்டதாக எண்ணி பலரும் பதறியுள்ளனர். அதன் பிறகு உள்ளே சென்று உள்ளே பார்த்தவர்கள் அது கோலியின் நாய் என தெரிந்ததும் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து பல வெளிநாட்டினர் “இந்தியர்கள் எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வைத்து விட்டனர்” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர்.

பாருங்க:  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப ஸ்வாமி உலா