Entertainment
விமானிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் விமானமே ஓட்ட தெரியாமல் விமானியான பயணி
ஆச்சரியங்கள், அதிசயங்கள் கலந்ததுதான் இந்த உலகம். தன்னம்பிக்கை, விடா முயற்சி போன்றவை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என இந்த நிகழ்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துல திடீரென விமான நிலையத்தை தொடர்பு கொண்ட ஒருவர், விமானி ஒருவர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதை தெரிவிக்கிறார். அவரால் விமானம் இயக்க முடியாமல் இருப்பதையும் தெரிவிக்கிறார்.
அந்த பயணியிடம் விமான கட்டுப்பாட்டு அறையில் பேசி அவர்கள் சொல்வது போல விமானத்தை இயக்க சொல்கின்றனர். அவர்கள் கொடுத்த இயக்கத்தின்படியே விமானத்தை இயக்கிய அந்த பயணி,
புளோரிடா கடற்பகுதியில் பறந்த ஒற்றை ரக என்ஜின் கொண்ட விமானத்தை கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளின் அறிவுரையுடன் இயக்கிய நபர் பத்திரமாக தரையிறக்கினார்.
துளியும் முன் அனுபவம் இல்லாத நபர் நிஜ விமானி போல் விமானத்தை தரையிறக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
