Latest News
கிளம்பிய விமானம் இரண்டாக பிளந்ததால் பரபரப்பு
கோஸ்டாரிகாவில்
அவசரமாகத் தரையிறங்கும் போது சரக்கு விமானம்
ஒன்று அப்படியே இரண்டாகப் பிளந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக்
பெருங்கடலில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. கோஸ்டாரிகாவில் டிஎச்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக விமானம் விபத்திற்குள்ளாகி, இரண்டாகப் பிளந்தது.
புறப்பட்ட
25 நிமிடங்களில் அந்த விமானம் அவசரமாகத்
தரையிறங்க மீண்டும் திரும்பி உள்ளது. அதன்படி காலை நேற்று காலை
10:30 மணிக்கு (1630
GMT) விமானம் மீண்டும் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது தான் இந்த விபத்து
ஏற்பட்டது. ஹைட்ராலிக் பிரச்சனை காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
விபத்து
ஏற்படும் போது, விமானத்தில் விமானி உட்பட 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.