Entertainment
மீன் ஃப்ரை செய்யும் கடையில் அருண் விஜய்
ப்ரியம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். இவர் நீண்ட நாட்கள் பல படங்களில் நடித்த போதும் பெரிய அளவில் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தார்.
பின்பு வந்த மலை மலை, மாஞ்சா வேலு, தடயம், தடையற தாக்க, அஜீத்துடன் நடித்த என்னை அறிந்தால் போன்ற படங்கள் இவரது மார்க்கெட் வேல்யூவை உயர்த்தின.
தற்போது அருண் விஜய்யும் பிஸியான நடிகராகி விட்டார்.
அவரது மைத்துனரும் இயக்குனருமான ஹரி இயக்கும் அரிவாள் படத்தில் தற்போது இவர் நடித்து வருகிறார்.
இந்த படப்பிடிப்புகள் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் தனுஷ்கோடியில் மீன் ப்ரை செய்து விற்கும் கடையில் நின்று அந்த கடையின் உரிமையாளர் பெண்மணியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!! இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது என அருண் விஜய் கூறியுள்ளார்
