பிப்ரவரியில் மழை கொட்டும்- தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்

20

பிரபல தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான். இவரின் மழைக்கணிப்புகள் எல்லாமே துல்லியமாக இருக்கும். இந்த வருடம் ஜனவரியில் பெய்த மழை குறித்து ஏற்கனவே இவர் கூறி இருந்தார்.

இவர் கூறியபடியே ஜனவரியில் யாரும் எதிர்பார்க்காத அளவு சென்னையிலும் சரி தென்மாவட்டங்களிலும் சரி மிக தீவிர மழை பெய்தது.

தற்போதுதான் மழை ஓய்ந்து லேசாக வெயில் அடித்து வரும் நிலையில் அடுத்த மாதமும் கடுமையான மழை பெய்யும் என பிரதீப் ஜான் கூறியுள்ளது கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பெய்யும் மழை அசாதரணமாக இருக்கும் என இவர் கூறியுள்ளது கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க மக்களை அறிவுறுத்துகிறது.

பாருங்க:  அதிக விலை கொண்ட பிரியாணி