cinema news
பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் தனுஷ் நடிக்கிறாரா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இந்த படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடிக்கிறார் என இரண்டு நாளுக்கு முன் வந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் தனுஷும் நடிக்கிறார் என புதிய செய்திகள் இன்று உலவியது.
இதற்கிடையில், தனுஷ் இந்த படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடலை எழுதி பாடுவதாக வதந்திகள் பரவின. இதுபற்றி விசாரித்த பொழுது, இந்த செய்தி அனைத்துமே தவறானது என தெரிவித்தனர் . மேலும் இது அனைத்தும் முற்றிலும் தவறான செய்தி என்று கூறுகின்றனர்.