Entertainment
பாஸில் இயக்கிய அருமையான திரைப்படம்- பொம்முக்குட்டி அம்மாவுக்கு வயது 34
பாஸில் இயக்கிய அருமையான திரைப்படம் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இசைஞானி இளையராஜா அவர்களின் சொந்த படமான பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சத்யராஜ் பக்கா ஆக்சன் படங்களாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் சத்யராஜை வைத்து பக்காவான குடும்ப சித்திரத்தை கொடுத்த ஒரே இயக்குனர் பாஸில் ஆகத்தான் இருக்கும்.
தாங்கள் ஆசை ஆசையாய் பெற்ற ஒரே குழந்தையை ஒரு விபத்தில் பறிகொடுத்த தம்பதியினர் மிகவும் வேதனைப்பட்டு அதை மறக்க மற்றொரு குழந்தையை தத்தெடுக்கின்றனர்.
அந்த குழந்தைக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடுகிறார். அவர்களுக்குள் நடக்கும் பாசப்போராட்டம்தான் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படம்.
இளையராஜா இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக வெற்றி பெற்றது.
பொம்முக்குட்டி அம்மாவுக்கு, உயிரே உயிரின் ஒளியே, குயிலே குயிலே, என் பத்தரை மாற்று, காலெல்லாம் நோகுதடி போன்ற பாடல்கள் இப்படத்தில் ஹிட் ஆகின.
சத்யராஜ், சுகாசினி, ரகுவரன், ரேகா போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
சிறப்பான திரைக்கதையால் அனைவரையும் கவரும்படி பாஸில் இப்படத்தை இயக்கி இருந்தார்.
