மாமனார் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வெங்கடபுரம் பகுதியில் வசித்து வருபவர் முனிகிருஷ்ணன். இவருக்கும் பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தில் வசிக்கும் யுவராணிக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
முனிகிருஷ்ணன் லாரி ஒட்டுனர் என்பதால் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், இரவு நேரங்களில் யுவராணியின் மாமனார் டில்லி பாபு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பலமுறை யுவராணி கண்டித்தும் அவர் தன் பாலியல் லீலைகளை நிறுத்தவில்லை.
எனவே, யுவராணி இதுபற்றி கணவரிடம் தெரிவித்தார். ஆனால், அவரின் புகாரை முனிகிருஷ்ணன் நம்பவில்லை எனத்தெரிகிறது. இதனால், விரக்தியின் எல்லைக்கு சென்ற யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், மாமனார் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லைகளை கடிதமாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டில்லி பாபு தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.