20 நாள் ஆன பச்சை குழந்தையை வாலியில் அமுக்கி கொலை – கொடூர தந்தை கைது

181

பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி கொலை செய்த தந்தை டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புது டெல்லி பிந்தபூர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் இனிப்பு பலகாரங்களை தயாரித்து தரும் பணியை செய்து வந்தார். 2018ம் ஆண்டு அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 20 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. முகேஷ் மனைவி மற்றும் தனது குடும்பத்தாருடன் ஒன்றாக வசித்து வந்தார்.
இந்நிலையில், அவரின் மனைவி அவரின் அம்மா வீட்டிற்கு அடிக்கடி செல்வது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மனைவியின் மீது ஏற்பட்ட கோபத்தில், குழந்தையை தூக்கி சென்று ஈவு இரக்கமின்றி குளியலறையில் உள்ள வாலியில் உள்ள நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

இதைக்கண்டு கதறி அழுத அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முகேஷை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

பாருங்க:  ஆர்.கே.சுரேஷை மீண்டும் இயக்கும் பாலா - அதிரடி அறிவிப்பு