வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தை – கொடூரமாக கொலை செய்த மகன்

179
Murder

வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் வசித்து வருபவர் சங்கர் குமார். இவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஆவார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ரகுவீர் குமார் என்கிற மகன் இருக்கிறார். அவர் எப்போதும் செல்போனில் பப்ஜி வீடியோ கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். இதை சங்கர் குமார் பலமுறை கண்டித்தும் ரகுவிர் நிறுத்தவில்லை.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சங்கர் குமார் அவரின் செல்போனை பறித்தார். மேலும், இன்டர்நெட் சேவையும் முடக்கினார். இதனால் கோபமடைந்த ரகுவீர் ரகுவீர் குமார் குடும்ப உறுப்பினர்களை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினார் . மேலும் அவரின் தந்தை சங்கர் குமாரை கடுமையாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதோடு அவரின் உடலை மூன்று பாகங்களாக வெட்டியுள்ளார்.

இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட அவர்கள் அங்கு சென்று சங்கர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட ரவிக்குமாரிடம் அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாருங்க:  என்னை தவறாக நினைக்காதே ; கவினுடன் உருகும் சாண்டி : பிக்பாஸ் வீடியோ