தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணத்திற்கு பாஸ்ட்டேக் அவசியம் என கடந்த ஆண்டே மத்திய அரசு அறிவுறுத்தியது. அப்படி பாஸ்ட்டேக் இல்லை என்றால் இரண்டு மடங்கு கட்டணம் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதனால் தற்காலிகமாக பாஸ்ட் டேக் விசயம் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் புதுவருடம் பிறக்கும் நாளையில் இருந்து ஜனவரி 2021ல் இருந்து பாஸ்ட்டேக் கட்டாயம் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாஸ்ட்டேக் இல்லாதவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனால் பாஸ்ட்டேக் அப்ளை செய்து பாஸ்ட்டேக் தரும் கோடிங் ஸ்டிக்கரை வண்டியில் ஒட்டி விடும் நடவடிக்கைகளில் இறங்குவது சாலச்சிறந்தது.

