இன்று முதல் பாஸ்ட்டேக் கட்டாயம்

12

கடந்த இரண்டு வருடங்களாகவே பாஸ்ட்டேக் முறைக்கு மாற வேண்டும் என மத்திய அரசு வாகன ஓட்டிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. பாஸ்ட்டேக் என்பது நாம் முன்பே பணம் செலுத்தி பெறும் ஒரு கோடிங் ஸ்டிக்கர் ஆகும்.

இந்த கோடிங் ஸ்டிக்கரை வண்டியின் முன்னால் ஒட்டிக்கொண்டால் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த தேவையில்லை. பாஸ்ட்டேக் கோடிங்கை தானாக லோட் செய்து அதில் பாஸ்ட்டேக் அக்கவுண்டில் இருந்து நீங்கள் செலுத்த வேண்டிய பணம் கழிந்து விடும்.

இந்த முறையை இரண்டு வருடமாக அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. பல முறை அவகாசமும் கொடுத்தது. 15.2.2021ல் இருந்து பாஸ்ட் டேக் கட்டாயம் என சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் பாஸ்ட்டேக் இல்லாமல் செல்லும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  டி 20 அணிக்கு ரோஹித் கேப்டனா? ஹர்ஷா போக்ளேவின் பதில்!