Entertainment
விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் விரைவில் வருகிறது. பொங்கலுக்கு முன்பாக 13ம் தேதி இப்படம் தியேட்டரில் அல்லாமல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தை லட்சுமண் இயக்கியுள்ளார். இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் வேளையில் இப்படம் பற்றி விஜய் தொலைக்காட்சி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் ஜெயம் ரவி கலந்து கொண்டிருக்கிறார்.
விவசாயிகளை மதிக்கிறேன் எங்கள் நாட்டின் இந்த உண்மையான ஹீரோக்களை வாழ்த்துவதற்காக நான் கவுரவிக்கப்பட்டேன் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.
