நீதிமன்றத்தில் தியானம் – நிர்மலா தேவிக்கு இப்படி ஒரு ரசிகரா?

198

பேராசிரியர் நிர்மலாதேவியின் ரசிகர் ஒருவர் அவரைப் போலவே நீதிமன்றத்தில் தியானம் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிறைக்கு சென்ற பேராசிரியர் சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் ஒவ்வொரு முறை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த போதும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சில செய்கைகளை செய்தார். சாமிவந்தது போல் அருள் வாக்கு கூறினார். திடீரென கீழே அமர்ந்து தியானம் செய்தார். அதன்பின் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஒவ்வொரு முறையும் அவர் நீதிமன்றத்திற்கு வரும் போதும் அவரை பார்க்க உசிலம்பட்டியை சேர்ந்த அன்பழகன் என்பவர் வருவது வழக்கம். இவர் தன்னை நிர்மலாதேவியின் ரசிகர் எனக் கூறிக் கொள்கிறார். நேற்று இவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஆனால், நிர்மலா தேவி வரவில்லை. எனவே ஏமாற்றமடைந்த அவர் நிர்மலாதே தேவியை போலவே நீதிமன்ற வளாகத்தில் சிறுது நேரம் தியானம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவரின் வினோத செயலைக்கண்டு அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிரித்த சம்பவமும் நடைபெற்றது.

பாருங்க:  ஸ்கூட்டரில் வந்த நிர்மலா தேவி.. வைரல் புகைப்படம்...