Food and Kitchen tips
மதுரை நாகப்பட்டினம் அல்வா கடையில் கிடைக்கும் சுவைமிகு உருளைக்கிழங்கு மசாலா
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள வீதிகளில் மேல சித்திரை வீதியில் உள்ளது நாகப்பட்டினம் நெய் மிட்டாய்கடை. இந்த கடையில் ஸ்வீட் காரம் ரொம்பவும் புகழ்பெற்றது.
அதை விட இந்த கடையில் காலை 11 மணியளவில் இருந்து விற்பனையாகும் உருளைக்கிழங்கு மசாலா ரொம்ப சுவையானது. இங்கு மட்டுமே இந்த உருளைக்கிழங்கு மசாலா கிடைக்கிறது.
இது ஒரு தனி சுவையாக இங்கு கிடைக்கிறது.
10 ரூபாய் கொடுத்து ஒரு உருளைக்கிழங்கு மசாலா வாங்கினால் நாம் சாப்பாட்டுக்கு தொட்டுக்கொண்டு அழகாய் சாப்பிடலாம் அவ்வளவு சுவையான மசாலா இது என்பதால் இது சீக்கிரமாக மதிய நேரங்களில் விற்று தீர்ந்து விடுகிறது.
இப்பகுதியில் வேலை பார்ப்போர் மதிய சாப்பாடு வீட்டில் இருந்து கட்டி எடுத்து வரும்போது இங்கு உருளைக்கிழங்கு மசாலா தொட்டுக்கொள்ள வாங்குகிறார்கள் சுவை மிகு உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி என்ற லிங்க் தரப்பட்டுள்ளது பார்த்துக்கொள்ளலாம்.
