Latest News
முக வசீகரத்தையும் அழகையும் தரும் பாகிஸ்தான் களிமண் முல்தானி மட்டி
ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஸ்ரேயாவை காதலிப்பதற்காக கருப்பாக இருக்கும் தான் சிகப்பாவதற்காக முல்தானி மட்டியிலேயே குளியல் போடுவார்.
பெரும்பாலான அழகு பெண்கள் உபயோகப்படுத்துவதுதான் முல்தானி மட்டி. முல்தானி மட்டி என்பது பாகிஸ்தானில் முல்தான் என்ற நகரத்தில் கிடைக்கும் களிமண். எதற்கும் உதவாத களிமண் என்று பொதுவாக சொல்வார்கள் அப்படி சொல்லிவிட முடியாது.
இந்த வெள்ளைக்களிமண்ணான முல்தானி மட்டி பலரது அழகுக்கு உதவுகிறது.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த முல்தானி மட்டியை முகத்தில் நன்றாக பூசி நன்றாக இறுக காயவைக்க வேண்டும். முல்தானி மட்டி காயும்போது முக அசைவுக்கு வேலை கொடுக்க கூடாது. அப்படி அடிக்கடி அசைத்தால் முக சுருக்கத்துக்கு வாய்ப்பு உண்டாகி விடும். முகத்தில் முல்தானி மட்டியை அப்ளை செய்து விட்டு பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். மின் விசிறியை சுழல விட்டு அதற்கு நேரே முகத்தை காண்பிப்பது போல் படுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு வாஷ் செய்து குளித்து விட வேண்டும்.
வெளியில் அலைவதால் முகத்தில் சேர்ந்திருக்கும் நாட்பட்ட அழுக்குகள் நீங்கி உங்கள் முகம் பளிச்சென்று தெரியும். உடனடியாகவே நல்ல மாற்றம் பெறும் வாரம் இருமுறை அல்லது 3 முறை செய்தால் முகம் நன்றாக பொலிவு பெறும்.
முல்தானி மட்டி நாட்டுமருந்து கடைகளில் பவுடராக கிடைக்கிறது. வாங்கி உபயோகியுங்கள்.
