Latest News
முக வசீகரம் கிடைக்க மந்திரம்
நம்மில் பலர் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்களுக்கு முக வசீகரம் இருக்காது அவர் நல்லவராகவே இருந்தாலும் அவர் செல்லும் இடங்களில் போதிய மதிப்பு இருக்காது.
நியாயமாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கூட கை நழுவி போய்விடும். நமக்கு வாய்ப்பு தரும் மற்றொருவர் நம்மிடம் அந்த வேலையை கொடுப்போம் என நினைக்க மாட்டார். சாதாரணமாக நினைத்து சென்று விடுவார்.
முகத்தில் வசீகர தன்மை இருந்தால் எல்லோருமே மரியாதை செய்வார்கள். நீங்களே குறிப்பிட்ட ஒன்றை விரும்பாவிட்டாலும் நீங்கதான் இந்த வேலையை செய்து தரவேண்டும் என வற்புறுத்துவார்கள்
வசீகர தன்மை எல்லாவற்றுக்கும் முக்கியம் அதற்காக தான் கீழ்க்காணும் சித்தர்கள் அருளிய மந்திரம் தரப்படுகிறது.
“ஓம் ஏம் நம”
இந்த மந்திரத்தை இறைவனையும் சித்தர்களையும் நினைத்து வணங்கி தினமும் 1008 முறை சொல்லி வரவேண்டும். இந்த மந்திரத்தை ஒரு மண்டலம் என சொல்லக்கூடிய 48 நாட்கள் சொல்லி வரவேண்டும் என்பது முக்கியம்.
இந்த மந்திரம் சொல்லி வரும் நாட்களில் தவறான காரியம் எதுவும் செய்யக்கூடாது. 48 நாட்கள் சொல்லி வாருங்கள் பிறகு தினமும் கூட சொல்லலாம் முக வசீகரம் தானாக உண்டாகும்.
