பிரதமர் ஆகிறாரா மோடி

மீண்டும் பிரதமர் ஆகிறாரா மோடி? கருத்துக்கணிப்பில் தகவல்

தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பில் நாடு முழுவதும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தோடு சேர்ந்து, நாடுமுழுவதும் 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ம் தேதி முடிவடைந்தது. வருகிற மே 23ம் தேதி 8 மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டைம்ஸ் நவ் ஊடக கருத்துக்கணிப்பு படி பாஜக 306 இடங்களை பிடிக்கும் எனவும், காங்கிரஸ் அணி 132 பிடிக்கும் எனவும், மற்ற கட்சிகள் 132 இடங்களை பிடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியா டுடே மற்றும் ஆக்ஸிஸ் எடுத்த கருத்துக்கணிப்பு படி பாஜக 339 -365 இடங்களை பிடிக்கும் எனவும், காங்கிரஸ் 77-108 இடங்களை பிடிக்கும் எனவும், இதர கட்சிகள் 69-65 இடங்களை பிடிக்கும் என செய்தி வெளியிட்டுள்ளது.

சி.என்.என். மற்றும் நியூஸ் 18 சேனல்படி பாஜக 336, காங்கிரஸ் 82, இதர கட்சிகள் 124,

நியூஸ் 24 செய்தி படி பாஜக 350, காங்கிரஸ் 95, இதர கட்சிகள் 97 இடங்களை பிடிக்கும் என செய்தி வெளியிட்டுள்ளன.

இப்படி பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என அறிவித்திருப்பதால், மோடியே மீண்டும் பிரதமராவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனாலும், கருத்துக்கணிப்பு என்பது மாறும். அதை ஏற்க முடியாது என காங்கிரஸார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.