cinema news
தபேலா எடுத்து அடிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா- ஈவிகேஎஸ் இளங்கோவனின் சர்ச்சை பேச்சு
இளையராஜா ஒரே ஒரு வார்த்தை சொல்லி விட்டார், அதுவும் மோடியும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார். தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட கட்சிகள் , எழுத்தாளர்கள் எல்லாம் இளையராஜவை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை பற்றி பேசியுள்ள பேச்சுக்கள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
தபேலா எடுத்து அடிக்கிறவன்லாம் இசையமைப்பாளரா?
கம்யூனிச சித்தாந்தத்தை ஒரு காலத்தில் ஏற்றுக்கொண்டவர்கள், பணமும் புகழும் வந்த உடன் தாங்கள் உயர்ந்த ஜாதி என நினைத்துக்கொள்கிறார்களே இது என்ன நியாயம் .
வயது 80க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம் என இளையராஜாவை பற்றி மிக மோசமாக பேசியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேச்சு முற்றிலும் தவறானது. என்ன Mr.திருமாவளவன் உங்கள் கூட்டணி கட்சி பேச்சை கண்டிக்க மாட்டீர்களா? ஒரு நபர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாதா? அதற்கு ஏன் இவ்வளவு அபத்தமான பேச்சு. pic.twitter.com/yIB5Rk4kno
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) April 21, 2022