cinema news
ரோமியோக்கள் ஜாக்கிரதை- பெண்களை பின் தொடர்ந்தால் 7 வருசம் உள்ளே போகணும்
கடந்த திங்கட்கிழமை முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது இதில் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்று வருகிறார். இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் 110 விதியின் கீழ் பல்வேறு விதமான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வரதட்சணைச் கொடுமைக்கான தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
வரதட்சணை போன்ற கடும் குற்றங்களுக்கு இதற்கு முன்பே 7 ஆண்டுகள் தண்டனை இருந்த நிலையில் தற்போது அதை 10 ஆண்டாக அதிகரிக்கப்படுகிறது என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதே போல் பாலியல் தொழிலுக்கு சிறார்களை விலைக்கு வாங்கினால் குறைந்தப்பட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை. பெண்களை பின் தொடர்ந்து சென்று டீஸ் செய்யும் குற்றத்திற்கு ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது இதற்கு முன்பு பெண்களை பின் தொடர்வதற்கு தண்டனை 5 ஆண்டாக இருந்தது. 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.