சூர்யா நடித்த ஜெய்பீம் பட பிரச்சினையில் தேவையில்லாமல் பாமக முக்கிய தலைவரையும் வன்னியர்கள் பயன்படுத்தும் விளக்கு போன்ற குறியீடையும் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கடுமையான பிரச்சினைகள் எழுந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இது பற்றி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதினார்.
இதை பார்த்த சூர்யா தாங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் எடுத்தது எல்லாம் சரிதான் என்கின்ற வகையில் பதிலளித்திருந்தார்.
இதனால் கோபமடைந்த பாமகவினர் சூர்யாவை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர். அவரின் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் படத்துக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்ற சூழ்நிலை இருந்தது.
அந்த சூழ்நிலை தற்போது உறுதியாகிவிட்டது. சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூர் மாவட்டத்தில் வெளியிட கூடாது என பாமக சார்பில் மாவட்ட நிர்வாகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.