Latest News
ஈரோடு வந்த ரயிலில் அனாதையாக கிடந்த கைத்துப்பாக்கி- எதிர்பாராமல் நடந்த டுவிஸ்ட்
சென்னையிலிருந்து ஈரோடுக்கு இன்று எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்தது. இது சென்னையில் இருந்து ஈரோடு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இதில் 8 தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது
இந்த ரயில் பயணிகளை இறக்கிவிட்டு டீசல் செட்டுக்கு சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளது.
பிறகு ரயிலை சுத்தம் செய்து விட்டு பார்க்கும்போது HA1 பெட்டி A கேபின் சீட் 3 இல் பிஸ்டலும் கைத்துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் கேட்பாரற்று இருந்துள்ளது
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த பெட்டியில் பயணம் செய்தவர் ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறைத் தலைவர், சிலை தடுப்பு பிரிவு அதிகாரியுமான பொன்மணிக்கவேல் என்ற தகவல் தெரியவந்தது
பிறகு ரயில் நிலையத்தைத் தொடர்பு கொண்ட பொன்மாணிக்கவேல் அந்த பிஸ்டல் தன்னுடையது எனவும் தான் வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
