டிவி பார்த்தால் இனிமேல் நல்லா படிப்பு வரும் – இதோ வந்துவிட்டது கல்வி தொலைக்காட்சி திட்டம்!

203

மாணவ மாணவிகளின் கற்றல் திறனை வளர்க்க இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

ரு.5 கோடி செலவில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், ஆங்கில பாடங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளும், நீட் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான படங்களும், மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.

இதற்காக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தின் 8வது தளத்தில் நிகழ்ச்சி அரங்கு, ஒலி மற்றும் ஒளிப்பதிவுக்கூடம், நிகழ்ச்சி தொகுப்புக் கூடம் ஆகியவை தனித்தனியே துவங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் துவங்கி வைத்தர். டிவி பார்த்தல் மாணவர்கள் படிப்பு கெடும் என்கிற நிலை இனி மாறும். தொலைக்காட்சி மூலம் அவர்கள் கல்வித்திறன் மேம்படுத்தப்படும் என இந்த விழாவில் அவர் பேசினார்.

பாருங்க:  ஏப்ரல் 18 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்