பேனர்களை வைக்கக் கூடாது – ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

215
Banner

சாலைகளில் பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் பேனர்களை வைக்கக்கூடாது என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஒரு கூட்டாக இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

மக்களின் நலனுக்காக தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கமாகும். எனவே எச்சூழ்நிலையிலும் எக்காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கழக உடன்பிறப்புகள் அனைவைரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாருங்க:  2019 சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது!