Entertainment
அஜீத் நடித்த என்னை அறிந்தால் 7ம் வருடத்தை கொண்டாடிய கெளதம் மேனன் டீம்
கெளதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்தது. சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் அஜீத் இதில் நடித்திருந்தார்.
இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படத்தில் அருண் விஜய் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தில் அஜீத் மிக ஸ்டைலாக நடித்திருந்தார்.
அருண் விஜய்யின் வில்லன் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் இன்றுடன் வெளியாகி 7 வருடங்களை கடந்து விட்டது. கடந்த 2015 பிப்ரவரி மாதம் 5ம் தேதி இப்படம் வெளியானது.
இதை ஒட்டி இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் பட டீம் இந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
