கொரோனா சிகிச்சை: மீண்டும் பணிகளைத் தொடங்கிய போரிஸ் ஜான்ஸன்!

கொரோனா சிகிச்சை: மீண்டும் பணிகளைத் தொடங்கிய போரிஸ் ஜான்ஸன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் தேறிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மீண்டும் தனது பணிகளைக் கவனிக்க ஆரம்பித்துள்ளார்.

கொரோனாவால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு இதுவரை 1,26,000 பேர் பாதிக்கப்பட்டு 16,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.  இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த செய்தியை டிவிட்டரில் அறிவித்த அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக வேலைகளை செய்து வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை என்பதால் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமான அவர் கடந்த ஒரு வாரமாக தனது ஓய்வு இல்லத்தில் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் இப்போது  பூரணமாக குணமடைந்துள்ள அவர் மீண்டும் தனது பணியினை ஏற்றுள்ளார். அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கத் தொடங்கியுள்ளார்.